சத்துருக்கொண்டான் படுகொலை: வெளிவராத சில கசப்பான உண்மைகள்




இராணுவத்தினர் படுகொலை செய்யும்போது, அங்கு எழும் மரண ஓலங்களை, பிள்ளைகள் கேட்கக் கூடாது என்பதற்காக தமது பிள்ளைகளின் காதுகளைப் பொத்திக்கொண்டனர். யாரேனும் உதவிக்கு வரமாட்டார்களா என்று பதறினர்.
இது இவ்வாறிருக்க சத்துருக்கொண்டான் கிராமத்திலும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளிலும் இராணுவத்தினர் வீடு புகுந்து பல தமிழர்களைக் கொன்று குவித்தனர். பெண்கள் சிறுவர்கள் என பலரையும் ஈவு இரக்கம் பாராது இராணுவத்தினர் கைகளைக் கட்டி பின்னர் கத்தியால் குத்திக் கொன்றனர்.

நிலா வெளிச்சத்தில், முழுமையாக இரவு படராத அந்தவேளையில் இராணுவத்தின் கத்திக் குத்துக்கு இலக்காகி குத்துயிரும் குலையுமாக இருந்த அரை உயிர் பிணங்களைக்கூட தேடி, அவர்கள் பிழைத்துவிடக் கூடாது என்பதற்காக எங்கு வெட்டினால் உடனே உயிர்பிரியுமோ, சிறிய ரக கத்திகளைப் பாவித்து வெட்டுகிறான் சிங்கள காடையன்.
ஏதும் அறியாத பாமர மக்கள், ஒரு புழுவுக்கு சமமான, சாதாரண தமிழர்களின் உடல்களை சிங்களவன் கத்திகள் பதம் பார்க்கின்றன்.

47 குழந்தைகள் உட்பட 184 பேரை ஈவு இரக்கம் பாராது கொலைசெய்தது சிங்கள இராணுவம், இவர்களோடு மறைந்த அஷ்ரபின் (இலங்கை முஸ்லீம் காங்கிரஸ் முன் நாள் தலைவர்) ஊர்காவல் படைகளும் இருந்ததாக ஊர்ஜிதமற்ற செய்திகள் கூறுகின்றது.
இலங்கையில் ஜிகாத் அமைப்பை நிறுவவும், அதற்காக முஸ்லீம் ஊர்காவல் படை ஒன்றை அமைத்திருந்தார் மறைந்த முன் நாள் முஸ்லீம் காங்கிரஸ் தலைவர் அஷ்ரப்.
இராணுவத்தோடு அப்போது இருந்த முஸ்லீம் ஊர்காவல் படையினரும் இருந்ததாகக் கூறப்படும் கசப்பான செய்திகளை மறைப்பதில் நியாயம் இல்லை. இச் செய்திகள் ஊர்ஜிதமற்றவையாகவே இருந்தாலும், அன்று நடைபெற்ற சம்பவங்கள் குறித்து மக்கள் அறிந்திருப்பது நல்லது.

இப் படுகொலையின்போது
கந்தசாமி கிருஷ்ணகுமார் என்பவர் மாத்திரமே சம்பவ இடத்தில் இருந்து சாதூரியமாகத் தப்பிச் சென்றுள்ளார். கண்ணால் கண்ட சாட்சியும் இவரே. இவர் இதுவரை சாட்சியங்கள் எதனையும் வழங்கவில்லை. அன்று சம்பவ இடத்தில் இருந்து காயங்களோடு தப்பிச் சென்ற கிருஷ்ணகுமார், ஒரு வீட்டின் கதவைத் தட்டி தாகத்திற்கு தண்ணீர் குடித்துவிட்டுச் சென்றுவிட்டதாக அறியப்படுகிறது. பின்னர் அவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டதாகவும், அவரைத் தேடி அங்கு இராணுவம் சென்றதால் அவரை கத்தோலிக்க குருமார் காப்பாற்றியதாகவும் சொல்லப்படுகிறது.

இச் சம்பவம் குறித்து ஆராய்ந்த, மற்றும் பிற சாட்சிகளை விசாரித்த கொலம்பிய பல்கலைக்கழகம் இதனை ஆவணப்படுத்தியது, இருப்பினும் அது குறித்த தகவல்களை அது தற்போது தனது இணையத்தில் இருந்து நீக்கியுள்ளது. http://www.columbia.edu/cu/lweb/data/indiv/area/idsas/LAWRENCE,Patricia.htm அமெரிக்காவில் உள்ள கொலராடோ பல்கலைக்கழக சட்ட விரிவுரையாளர்களும் இப் படுகொலை குறித்து ஆராய்ந்துள்ளனர்.

இப் படுகொலை நடந்து 20 ஆண்டுகள் ஆகின்றன, இதுவரை அக் கொலைகளைப் புரிந்தவர்கள் தண்டிக்கப்படவில்லை. அன்று நாதியற்று தமிழன் அவலக்குரல் எழுப்பியபோது வேடிக்கை பார்த்தது உலகம். தாம் ஒவ்வொருவராகக் கொல்லப்படப் போகிறோம் என்று நினைத்த அம்மக்களின் நிலை எவ்வாறு இருந்திருக்கும், ஓடிவிளையாடும்போது சிறு காயங்கள் ஏற்பட்டாலே தாங்கமுடியாத சிறுவர்கள் அன்று எத்தனை துன்பத்தை, வேதனையை அனுபவித்து துடிதுடித்து இறந்திருப்பார்கள், அன்றைய இரவு தமிழர்கள் சிந்திய இரத்தத்தால் சிவப்பாக அல்லவா மாறியது. எம்மைக் காக்க ஒரு ஆயுத அமைப்பு தேவை என்று தமிழன் நினைத்ததில் என்ன தவறு?

அதனால் தான், தம் இனத்தைக் காக்கப் புறப்பட்ட வீர மறவர்களை தமிழர்கள் காவல் தெய்வங்களுக்குச் சமமாக மதித்தனர். ஆயுதப் போராட்டம் அழிக்கப்பட்டாலும், தமிழர்களுக்கு இன்னும் ஒரு பேரவலம் வரும்போது அது தானாக முளைவிடும்!
அப்போது தோன்றும் வித்துகள் யாராலும் அழிக்கப்பட முடியாதவையாக இருக்கும் என்பதை உரக்கச் சொல்லுவோம், அதை ஊருக்கும் சொல்லுவோம்!

அதிர்வின் ஆசிரியபீடம்.

Comments

Popular posts from this blog

PM Modi to lay foundation of SEZ at JNPT

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire