40 காயப்பட்ட இராணுவத்தினர் முல்லைத்தீவு மருத்துவமனையில் அனுமதி

Source: www.athirvu.com

2 தினங்களுக்கு முன்னர் விமானத் தாக்குதல் நடைபெற்றதாகக் கூறும் இடத்தில் இருந்து காயப்பட்ட இராணுவத்தினர் பாலர் கொண்டுவரப்பட்டுள்ளதாக செய்திகள் கசிந்துள்ள அதேவேளை, பலர் இறந்திருக்கக் கூடும் என்ற செய்திகள் வெளியாகியுள்ளன. அதாவது சரத் பொன்சேகாவுக்கு ஆதராவகச் செயல்பட்ட இராணுவத்தினர் சிலரை, மணலாறு காட்டுப்பகுதியில் வைத்து இலங்கை அரசு தீர்த்துக்கட்டி இருக்காலம் என்றும் தற்போது அச்சம் வெளியிடப்பட்டுள்ளது. காடுகளுக்குள் புலிகள் இருப்பதாகக் கூறி தேடுதல் நடவடிக்கைக்கு என சில இராணுவத்தினரை அனுப்பி அவர்களை கோத்தபாயவின் கட்டளைக்கு அமைவாக, பிறிதொரு இராணுவக் குழு சுட்டு பழிவாங்கி இருக்கலாம் என நம்பப்படுகிறது.

இருப்பினும் சுதாரித்துக்கொண்ட சில இராணுவத்தினர் நடத்திய எதிர் தாக்குதலிலேயே, கோத்தபாயவின் இராணுவத்தினர் பலர் காயமடைந்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது. தற்போது காயமடைந்த இராணுவத்தினரை ஆதாரம் காட்டி, புலிகளின் முன் நாள் தளபதிகளான, ராம் அல்லது நகுலன் தாமே இத் தாக்குதலை நடத்தியதாக தெரிவிக்க இருப்பதாக பிறிதொரு செய்தி தெரிவிக்கிறது. இதன் மூலம், புலம்பெயர் தமிழ் மக்களிடம், ராம் மற்றும் நகுலன் போன்றோரின் செல்வாக்கை அதிகரிக்கவும், இன்னும் புலிகள் அச்சுறுத்தல் இருப்பதால் அவசரகால சட்டத்தை நீடிக்கவேண்டும் எனக் கூறுவதற்காகவும், மற்றும் உயர்பாதுகாப்பு வலையத்தை தக்கவைப்பதோடு, இராணுவத்தின் கெடுபிடிகளை அதிகரிக்கவும் இது உதவியாக அமையும் எனச் சொல்லப்படுகிறது.

இருப்பினும் இராணுவத்தினர் காடுகளுக்குள் சென்ற வேளை கிபீர் தாக்குதல் நடைபெற்றதால். விமானிகள் இராணுவத்தினர் மீதே மாறி தாக்குதலை நடத்தி இருக்கலாம் என்ற செய்திகளும் வெளியாகி இருப்பதும் பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது. எது எவ்வாறு இருந்தாலும் விடுதலைப் புலிகள் தற்போது வலிந்த தாக்குதல் எதையும் நடத்தமாட்டார்கள் என எதிர்வுகூறப்படுகிறது. இருப்பினும் தவிர்க்க முடியாத காரணம் எதுவும் ஏற்பட்டாலே அவர்கள் தாக்குதல் நடத்தி இருப்பார்கள் என விடையம் அறிந்தவட்டாரங்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

இராணுவத்தினர் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளமை பெரும் சந்தேகங்களைக் கிளப்பியுள்ளது.

முன்னைய செய்தி

நேற்று முன் தினம் அதிகாலை நேரம் மனலாறு காட்டுப் பக்திக்கு மேலாகப் பறந்த இலங்கையின் கிபீர் விமானங்கள் குண்டுத்தாக்குதல் நடத்தியதாக நம்பத்தகுந்த வட்டாரத்தில் இருந்து அதிர்வுக்கு செய்திகள் கசிந்துள்ளது. அத்தோடு சுமார் 40 காயமடைந்த இராணுவத்தினரை துருப்புக்காவி மூலம் முல்லைத்தீவு வைத்தியசாலைக்கு கொண்டுசென்றதாகவும் செய்திகள் கசிந்துள்ளது. காவுவண்டிகள் மருத்துவமனைக்குச் சென்றபோது, அதில் இருந்து பல இராணுவத்தினர் காயம் அடைந்த நிலையில் சிகிச்கைக்காக இறக்கப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்ட தகவல்கள் கிடைக்கப் பெற்றுள்ளன.

நோயாளர் காவு வண்டியுடன் சென்ற இராணுவத்தினர் பதற்றமடைந்து காணப்பட்டதாகவும் வாகனங்கள் மணலாற்றில் இருந்தே அங்கு வந்ததாக அறிய முடிந்ததாகவும் சம்பவத்தினை நேரில் பார்த்த மக்கள் தெரிவித்துள்ளனர். அண்மைய காலமாக வன்னி மற்றும் மட்டக்களப்பு காட்டுப் பகுதிகளில் பல்வேறு அசம்பாவிதங்கள் நடைபெறுவதாகத் தெரிவிக்கப்படுகின்ற போதிலும் இந்தச் சம்பவம் குறித்த தகவல்களை உறுதி செய்ய முடியாத நிலையே காணப்படுகிறது. இருப்பினும் இன்று கண்ணால் கண்ட சாட்சியங்களை வைத்துப் பார்க்கும்போது, பெரும் சந்தேக வெளியிடப்பட்டுள்ளது.

அத்தோடு, ஓமந்தை மற்றும் முகமலை ஆகிய பகுதிகளிலும், மட்டக்களப்புப் பகுதிகளிலும் பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளதாகவும் அங்கிருந்து கிடைக்கும் தகவகள் தெரிவிக்கின்றன.

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire