தமிழினப் படுகொலை புத்தகம் லண்டன் அனுப்ப சுங்கத்துறையினர் முதலில் மறுப்பு, பின்னர் சரி செய்யப்பட்டது......

தமிழினப் படுகொலை புத்தகங்கள் இரண்டாவது ஏற்றுமதிக்காக நேற்று சுங்கத்துறையினரின் சோதனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது. (முதலில் கனடாவுக்கு புத்தகங்கள் அனுப்பப்பட்டு, புத்தகங்கள் கப்பலில் சென்று கொண்டு இருக்கின்றன) அவர்கள் சோதனை செய்த பின்னர், முன்பு நமது புத்தகத்திற்கு தயக்கம் காட்டிய அதே அதிகாரி, இன்றும் புத்தகங்களை அனுப்ப மறுத்து விட்டதோடு, உயர் அதிகாரிகளின் அனுமதிக்கு பின்னரே தான் கையெழுத்திடுவேன் என்று கூறிவிட்டார். உடனடியாக இச்செய்தியை ஏற்றுமதி முகவர் நமது அறிவிக்க, சுங்கத்துறை உயர் அதிகாரிகளை நேரிடையாக சந்தித்து, புத்தகம் கூறித்து விளக்கம் அளிக்கப்பட்ட பின்னர், ஏற்றுமதிக்கு அனுமதியாளிப்பாதாய் உறுதியளித்து, கீழ் அதிகாரிகளுக்கு புத்தக ஏற்றுமதிக்கு எந்த தடையும் இல்லை. ஆதலால், புத்தத்தை ஏற்றுமதிக்கு அனுமதியளிக்க கட்டளையிட்டனர்.

தற்போது, எவ்வித தடங்களும் இல்லாமல், வரும் திங்கள் - செவ்வாய் கிழமையில் பெட்டகத்தில் அடைக்கப்பட்ட பின்னர், வரும் 17ம் தேதி கப்பலில் தமிழினப் புத்தகங்கள் லண்டனுக்கு கொண்டு செல்லப்பட உள்ளன என்பது மகிழ்ச்சியான செய்தி. இன்னொரு மகிழ்ச்சியான செய்தி, சுங்கத்துறை அதிகாரிகள் தங்கள் அனைவருக்கும் இப்புத்தகத்தின் ஒரு பிரதியை இலவசமாய் கிடைக்குமான என கோரிக்கை வைத்துள்ளனர். நாமும், அனைவருக்கும் இலவயமாய் புத்தகத்தின் ஒரு பிரதியை விரைவில் கொடுப்பதாய் உறுதி கொடுத்துள்ளோம்.

அக்னி சுப்ரமணியம்,
செயல் இயக்குநர்,
மனிதம்-மனித உரிமை அமைப்பு

வணக்கம்

தமிழினப் படுகொலைகள் - வடகிழக்கு மனித உரிமைகள் செயலகத்தால் 150 மேற்பட்ட படுகொலைகளை இப்புத்தகத்தில் ஆவணப்படுத்தப்பட்டுள்ளது. மேலும் விவரமாய் அப்படுகொலைகளில் பாதிக்கப்பட்ட - கொல்லப்பட்டவர்களின் பெயர்கள், வயது, அவர்களது தொழில் என்றும், புகைப்படங்கள், இடத்தின் வரைபடங்கள் என அனைத்தும் தன்னகத்தே கொண்டிருக்கிறது.
இப்புத்தகத்திற்கு உலக புகழ்பெற்ற மனித உரிமை செயல்பாட்டாளர் அமெரிக்க மருத்துவர் எலின் சாந்தர் முன்னுரை வழங்கியுள்ளது, புத்தகத்தின் தரத்தை மேலும் வலுவுட்டுவதாய் உள்ளது. அட்டைப் படம் உலக ஒவியர்களில் குறிப்பிட்டு சொல்லப்படுபவரான கனடாவைச் சேர்ந்த ஈழத்தமிழர் திரு. நந்தா கந்தசாமி வரைந்துள்ளார்.
புத்தகம் மிக நேர்த்தியாகவும், கையடக்கமாகவும், எடை குறைவாயும், நல்ல தரமான காகிதம் பயன்படுத்தப்பட்டுள்ளது. சாதா அட்டை நல்ல முறையில் கெட்டியாக உள்ளது. கெட்டி அட்டைப் புத்தகம் மிக நன்றாய் இருக்கிறது. புத்தகத்தை பார்த்தவுடன், அதன் உயர்வு தெரியும். அடுத்து, உள்ளே படித்தோமானால், அது இன்னும் புத்தகத்தின் மதிப்பை உயர்த்தும். அவ்வளவும் ஆவணம். அனைத்து தமிழர்களும் பாதுகாக்க வேண்டியது, அடுத்த தலைமுறைக்கு கொண்டு செல்ல வேண்டிய வரலாற்று பதிவாய் அச்சிடப்பட்டுள்ளது.இந்த மின்னஞ்சலை உங்கள் நண்பர்களுக்கு அனுப்பி வையுங்கள்.

நன்றி அக்னி சுப்ரமணியம், செயல் இயக்குநர், மனிதம்-மனித உரிமை அமைப்பு
தொடர்பு கொள்ள வேண்டிய முகவரி:மனிதம் வெளியீட்டாளர் உலகு முழுக்க விற்பனையாளர்கள் தேவை இப்புத்தகத்தின் மூலம் கிடைக்கப்பெறும் பணம் - புத்தக அச்சடிப்பு மற்றும் இதர செலவுகள் தவிர, இலங்கையில் போரினால் பாதிக்கப்பட்ட குழந்தைகளுக்கு அன்பளிப்பாய் கொடுக்கப்பட உள்ளது என்பது மிக முக்கியமாய் தெரிந்து கொள்ள வேண்டிய ஒன்று. இதற்கு முழுதுமாய் மனிதம் - மனித உரிமை அமைப்பு எடுத்துக் கொண்டுள்ளது.
தற்போது புத்தகங்கள் பெற்றுக் கொள்ள, உலக தமிழர்கள் பலர் மனிதம் வெளியீட்டாளர்களை தொடபெடுத்து வருகின்றனர். ஒன்று அல்லது இரண்டு புத்தகங்களை தனித் தனியே அனுப்புவதை விட, ஒவ்வொரு நாட்டிலும் உள்ள தமிழர் அமைப்புகள், தனி மனிதர்கள் மொத்தமாய் புத்தகத்தின் பொறுப்பை எடுத்து விற்பனை செய்யலாம்.

manitham@manitham.net

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire