சிறீலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் ஆட்சியில் 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டிருப்பதாக, “இலங்கையின் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு” கண்டனம் தெரிவித்துள்ளது.
2004ஆம் ஆண்டு சிறீலங்கா பிரதமராகப் பதவியேற்ற மகிந்த, 2005ஆம் ஆண்டின் பிற்பகுதியில் சிறீலங்கா அதிபராகப் பதவியேற்றிருந்தார்.
அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டத்தானம் தமிழ் வானொலியின் மட்டக்களப்புச் செய்தியாளர் ஜி.நடேசன் 2004ஆம் ஆண்டு மே மாதம் 31ஆம் நாள் சுட்டுக் கொல்லப்பட்டது முதல் இதுவரை தர்மட்ணம் சிவராம், புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி உட்பட 34 ஊடகவியலாளர்கள் படுகொலை செய்யப்பட்டுள்ளனர்.
இவர்களின் பட்டியலை வெளியிட்டுள்ள இந்த அமைப்பு, 34 பேரில் 30 பேர் தமிழர்கள் எனவும், மூவர் சிங்களவர்கள் என்றும் மற்றையவர் முஸ்லீம் சமூகத்தைச் சேர்ந்தவர் என்றும் சுட்டிக்காட்டியுள்ளது.
படுகொலை செய்யப்பட்டவர்கள் தவிர, மேலும் பல ஊடகவியலாளர்கள் சிறீலங்கா படைப் புலனாய்வாளர்கள், மற்றும் துணைப்படைக் குழுக்களால் தாக்கப்பட்டும், அச்சுறுத்தப்பட்டும் இருப்பதுடன், மேலும் பல வெளிநாட்டு ஊடகவியலாளர்கள் நாட்டைவிட்டு வெளியேற்றப்பட்டுள்ளனர்.
சண்டே ரைம்ஸ் பத்திரிகையின் பத்தி எழுத்தாளர் எஸ்.ஜே.திஸ்ஸநாயகம், மற்றும் யசிகரன், அவரது மனைவி வளர்மதி போன்றவர்கள் கடந்த ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்டு, ஒரு வருடத்திற்கும் மேலாகத் தடுத்து வைக்கப்பட்டுள்ளனர்.
சிறிலங்கா அரசுக்கு அஞ்சி நாட்டைவிட்டு வெளியேறிய ஊடகவியலாளர்கள், மனித உரிமையாளர்கள், மற்றும் பலரை இணைத்து ஐரோப்பாவைத் தளமாகக் கொண்டு இந்த “இலங்கையின் சனநாயகத்திற்கான ஊடகவியலாளர் அமைப்பு” இயங்கி வருகின்றது.
கொல்லப்பட்ட ஊடகவியலாளர்களின் விபரங்கள்:
2004
1. அய்யாத்துரை நடேசன் ஊடகவியலாளர் மே 31
2. கந்தசுவாமி ஐயர் பாலநடராஜ் எழுத்தாளர் ஓகஸ்ட் 16
3. லங்கா ஜயசுந்தர புகைப்படத்துறை ஊடகவியலாளர் டிசம்பர் 11
2005
4. தர்மரட்ணம் சிவராம் ஆசிரியர் ஏப்ரல் 28
5. கண்ணமுத்து அரசகுமார் ஊடகப்பணியாளர் ஜுன் 29
6. ரேலங்கி செல்வராஜா ஊடகவியலாளர் ஓகஸ்ட் 12
7. டீ.செல்வரட்ணம் ஊடகப்பணியாளர் ஓகஸ்ட் 29
8. யோககுமார் கிருஷ்ணபிள்ளை ஊடகப்பணியாளர் செப்ரம்பர் 30
9. எல்.எம்.பளீல் (நற்பிட்டிமுனை பளீல்) எழுத்தாளர் டிசம்பர் 02
10. கே.நவரட்ணம் ஊடகப்பணியாளர் டிசம்பர் 22
2006
11. சுப்ரமணியம் சுகிர்தராஜன் ஊடகவியலாளர் ஜனவரி 24
12. எஸ்.ரி.கணநாதன் உரிமையாளர் பெப்ரவரி 01
13. பஸ்ரின் ஜோர்ஜ் சகாயதாஸ் ஊடகப்பணியாளர் மே 03
14. ராஜரட்ணம் ரஞ்சித்குமார் ஊடகப்பணியாளர் மே 03
15. சம்பத் லக்மால் டி சில்வா ஊடகவியலாளர் ஜுலை 02
16. மரியதாசன் மனோஜன்ராஜ் ஊடகப்பணியாளர் ஓகஸ்ட் 01
17. பத்மநாதன் விஸ்மானந்தன் பாடகர்இ இசையமைப்பாளர் ஓகஸ்ட் 02
18. சதாசிவம் பாஸ்கரன் ஊடகப்பணியாளர் ஓகஸ்ட் 15
19. சின்னத்தம்பி சிவமகாராசா ஊடக உரிமையாளர் ஓகஸ்ட் 20
2007
20. எஸ்.ரவீந்திரன் ஊடகப்பணியாளர் பெப்ரவரி 12
21. சுப்ரமணியம் இராமச்சந்திரன் ஊடகப்பணியாளர் பெப்ரவரி 15
22. சந்திரபோஸ் சுதாகர் ஊடகப்பணியாளா ஏப்ரல் 16
23. செல்வராசா ரஜிவர்மன் ஊடகவியலாளர் ஏப்ரல் 29
24. சகாதேவன் நிலக்ஸன் ஊடகவியலாளர் ஓகஸ்ட் 01
25. அந்தோனிப்பிள்ளை செரின் சித்தராஞ்சன்ஊடகவியலாளன் நவ. 05
26. வடிவேல் நிமலராஜ் ஊடகப்பணியாளர் நவம்பர் 17
27. இசைவிழி செம்பியன் (சுபாஜினி) ஊடகவியலாளர் நவம்பர் 27
28. சுரேஸ் லிம்பியோ ஊடகப்பணியாளர் நவம்பர் 27
29. ரி.தர்மலிங்கம் ஊடகப்பணியாளர் நவம்பர் 27
2008
30. பரநிருபசிங்கம் தேவகுமார் ஊடகவியலாளர் மே 28
31. றஷ்மி முஹமட் ஊடகவியலாளர் ஒக்ரோபர் 06
2009
32. லசந்த விக்ரமதுங்க ஆசிரியர் ஜனவரி 08
33. புண்ணியமூர்த்தி சத்தியமூர்த்தி ஊடகவியலாளர் பெப்ரவரி 12
34. சசி மதன் ஊடகப்பணியாளர் மார்ச் 06
Link: http://www.meenagam.org/?p=6242
Subscribe to:
Post Comments (Atom)
ICTSI secures 25-year extension to operate Mindanao Container Terminal
Mindanao International Container Terminal Services Inc. (MICTSI), a subsidiary of International Container Terminal Services Inc. (ICTSI), ha...
-
Source: http://www.portwings.in/ports/pm-modi-to-lay-foundation-of-sez-at-jnpt/ Mumbai: Port Wings News Bureau: The Prime Mini...
-
Source: http://www.portwings.in/articlesinterviews/shortage-of-customs-officers-impediment-to-exim-business-trade/ Port Wings New...
-
Source: http://onlineuthayan.com/english-news/uthayannews/x284z263h1h1r2p2 Early morning incident – printing machine scorched, ...
No comments:
Post a Comment