இனியும் ஏமாற மாட்டோம்.... -ஈழத்தமிழன்-



தமிழனாய் பிறந்த மகிழ்வோடு என் தமிழ் இனத்துக்கு முதல் வணக்கம்.
அண்மைக்காலமாக எம்முடைய தேசத்தில் நடக்கின்ற அநியாய செயல்பாடுகளினால் ஆத்திரமடைந்து அவசர அவசரமாக என்னுடைய கன்னிக்கட்டுரையினை எழுதுகின்றேன்.
தமிழ் இனம் காலதிகாலமாக பல்வேறு வழிகளில் போரிட்டு எம் உரிமைகளை மீட்டெடுக்க முயட்சித்தது அதில் பல இடங்களில் வெற்றியையும் பெற்றது. முப்பது வருடமாக் நடைபெற்ற ஆயுத போராட்டம் மவுனமாகி போயுள்ள நிலையில் இங்கு அரங்கேறும் அரசியல் நியாயங்களை தான் இங்கு குறிப்பிட வந்துள்ளேன். 2009 மே 18 பின்னர் நடைபெற்ற ஜனாதிபதி தேர்தலில் கொலையாளி மஹிந்தவே ஆட்சிக்கு வந்தார். இதட்கு கூட எம்முடைய தமிழ் தரப்பு தலைவர்கள் மிகுந்த ஒத்தாசையாக இருந்தனர் இது பற்றி இப்போது தேவையில்லை.
இருப்பினும் பின்னர் இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் எம்முடைய தமிழ் தரப்புகள் (பல கட்சிகளை உள்ளடக்கி தலைவரினால் உருவாக்கப் பட்ட கூட்டமைப்பு) சிதறடிக்கப் பட்டது ஆனால் அதற்கான உண்மைக் காரணத்தினை நாம் அன்று அறிந்திருக்கவில்லை ஆனால் இன்று அதனை மக்கள் நன்றாக உணர்கின்றனர். அடிப்படை கொள்கைகளாக கருதப்படுகின்ற தாயகம். தேசியம். சுயநிர்ணய உரிமை. இறைமை என்பவற்றினை மே 18க்கு பின்னர் கூட்டமைப்பு தலைமைகள் தூக்கி எறிந்து விட்டது என்பது புலனாகின்றது அதோடு மட்டுமல்லாமல் கொள்கை பற்றுறுதியுடன் இருந்தவர்களும் தூக்கி வீசப்பட்டனர் என்பது தான் உண்மை.
அன்று பாராளுமன்ற தேர்தல் காலங்களில் கூட்டமைப்பில் இருந்து பிரிந்தவர்களில் கஜேந்திரகுமார் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியை உருவாக்கி போட்டியிட்ட போது அவர்கள் கூறிய நியாயங்களை நாம் கேட்கவில்லை காரணம் அவர்கள் தொடர்பாக பத்திரிகைகளில் வெளியான பல்வேறுபட்ட கருத்துக்கள் ஆதரவில்லாமல் செய்து விட்டது. நானும் அன்று அவர்களை ஆதரிக்கவில்லை. மாறாக அவர்கள் மீது கோபத்தினை உண்டு பண்ணியது. ஆனால் இன்று மக்கள் உணர்கின்றனர் பத்திரிகைகள் அவர்களை பளி வாங்கி விட்டதாகவே. அவர்கள் ஒரு நாடு இரு தேசம் என்ற கொள்கையினை முன்வைத்து போட்டியிட்டபோது அதனை பத்திரிகைகள் மக்கள் மத்தியில் தெளிவாக கொண்டு சென்றிக்கவில்லை மாறாக அவதூறுகலையே எழுதிவந்தது இதனால் அவர்கள் தோற்கடிக்க பட்டனர்.
வெற்றி பெற்ற கூட்டமைப்பு பாராளுமன்ற முதல் அமர்வின் போது கூட்டமைப்பின் தலைவராகவும் தமிழ் தேசத்தின் துரோகியாகவும் கருதப்படுகின்ற சம்பந்தன் சபையில் பயங்கரவாத்தை ஒளித்தமைக்காக அரசுக்கு பாராட்டு தெரிவித்தார். இதனுடாக அரசுக்கும் அண்டை நாட்டுக்கும் தன்னுடைய விசுவாசத்தை வெளிப்படுத்தினார். அதுபோலவே தேசியப்பட்டியலில் தெரிவான சுமந்திரனும் தமிழ் மக்கள் ஒருபோதும் தமிழீழம் கேட்கவில்லை மக்கள் விடுதலைபுலிகளை ஏக பிரதிநிதிகளாக ஏட்கவில்லை வேலையில்லாதவர்கள் தான் ஆயுத போராட்டங்களில் ஈடுபட்டனர் என்று எம் போராட்ட வரலாற்றையே கொச்சை படுத்தினர். பின்னர் மீண்டும் மே தினக் கூட்டத்தில் சிங்கக் கொடியை பிடித்து தன்னுடைய துரோகத்தனத்தை நிருபித்து விட்டார். இவ்வாறான தலைமை கொண்ட கூட்டமைப்பு எவ்வாறு கொள்கை வழியில் பயணிக்கும்??? சற்று சிந்தியுங்கள். மக்கள் சிலர் சிந்தித்தனர் மாற்று வழிதான் என்ன??
மறுபுறத்தில் கஜேந்திரகுமார் தலைமையிலான த.தே.ம.மு. மக்களால் தெரிவு செய்யப்படாதவிடத்திலும் தொடர்ந்தும் மக்களுக்காகவே குரல் கொடுக்கின்றார்கள் என்பதை தெளிவாக கன முடிந்தது. எந்தவிதத்திலும் தமிழர் உரிமைகள் வென்றெடுக்க படவேண்டும் என்பதில் அவர்கள் உறுதியாக செயல்படுகின்றனர் என்பதையும் அவதானிக்க முடிந்தது. அவர்களுடைய செயல்பாடுகளுக்கு அதரவளிப்பதே நோக்காக இருந்தது. இதில் முக்கியமானது அவர்களால் முன்நெடுக்கப்பட்ட நில ஆக்கிரமிப்புக்கு எதிரான போராட்டம் இன்றைய வரலாற்றில் முக்கியமானதொன்றாகும். இன்று மக்களின் தனியார் காணிகளும் அரச காணிகளும் மக்களின் விருப்பத்துக்கு மாறாக பறிபோய் கொண்டிருக்கின்றது. இதனை பதவியில் உள்ளவர்கள் தட்டி கேக்க தவறியமைக்கு காரணம் என்ன? 2009 பின்னர் மூன்றுவருட கால இடைவெளியில் கூட்டமைப்பு இது தொடர்பாக எந்த ஒரு முன்னெடுப்பையும் மேட்கொல்லாமல் இருந்துவிட்டு த.தே.ம.மு போராட்டத்தை அறிவித்ததும் சற்றும் தாமதியாமல் மறு நாளே தங்களுடைய போராட்டத்தை அறிவித்தது.
ஏன் இவ்வாறான ஏமாற்று வேலைகள்?? மக்கள் பவமையா.. நம்பி நம்பி ஏமாறுவதே எம்முடைய பிழைப்பாக போயுள்ளது.. நான் நினைக்கின்றேன் மாகாணசபை தேர்தல்வரை பொறுத்திருந்தால் இதனை வைத்தே தாங்கள் வெல்ல முடியும் என என்னி இப்போராட்டங்களை கிடப்பில் போட்டார்களோ என சந்தேகமும் எழுகின்றது.
ஆனால் த.தே.ம.முன்னணியினருக்கு அப்படியான ஒரு தேவை இல்லை என்பது புலனாகின்றது காரணம் இவர்கள் மாகாணசபையில் போட்டியிடப் போவதில்லை என்ற கருத்தை அவர்கள் முன்னே கூறியிருந்தனர். இதில் வேடிக்கை என்னவென்றால் த.தே.ம.மு முன்னெடுக்கப் பட்ட போராட்டம் நீதி மன்ற உத்தரவால் தடுத்து நிறுத்தப் பட்டது. ஆனால் கூட்டமைப்பால் முன்னெடுக்க பட்ட போராட்டம் தடுக்கப் படவில்லை காரணம் என்ன என்பது மக்களுக்கே புலனாகும். யார் கொள்கைவழியில் பயணிக்கின்றார்களோ அவர்களுக்கே தடைகளும் தடங்களும் வரும் என்பதனை எல்லோரும் எளிதில் புரிந்திருப்பார்கள். எம்முடைய தேசத்தின் இருப்புக்கள் பாதுகாக்க படவேண்டுமானால் கொள்கைவளியில் உள்ளவர்களுடன் உறுதியாக பயணிக்கவேண்டும் என்று கேட்டுக் கொள்கின்றேன்.
 -ஈழத்தமிழன்-

Comments

Popular posts from this blog

Shortage of Customs Officers impediment to EXIM business: Trade

PM Modi to lay foundation of SEZ at JNPT

Lankan Tamil Newspaper Uthayan office in Jaffna set on fire