டி.என்.எஸ்., பட்டயப் படிப்பு ரத்தாகுமா?
கப்பலில் பயிற்சி பெறுவதில் சிக்கல்:நடவடிக்கை எடுப்பாரா புது துணைவேந்தர்? Source: http://www.dinamalar.com/News_Detail.asp?Id=516550 சென்னை: கடல்சார் கல்வியான "நாட்டிகல் சயின்ஸ்' பிரிவில், டி.என்.எஸ்., எனப்படும் பட்டயப்படிப்பு படிக்கும் மாணவர்கள், கப்பலில் 18 மாதங்கள் பயிற்சி பெற வழியில்லாத நிலை ஏற்பட்டுள்ளதால், அவர்களின் எதிர்காலம் கேள்விக்குறியாகி உள்ளது. நாடு முழுவதும், ஆண்டுக்கு, 2,500 மாணவர்கள் இப்படிப்பில் சேரும் நிலையில், வெறும், 300 பேருக்கு மட்டுமே பயிற்சி பெறும் வாய்ப்பு கிட்டுகிறது. இதனால், மீதமிருக்கும் மாணவர்கள், பட்டம் பெற முடியாமலும், வேலை வாய்ப்பு பெற முடியாமலும் திண்டாடி வருகின்றனர். இந்த படிப்பை ரத்து செய்வது ஒன்று தான், இப்பிரச்னைக்கு தீர்வாக அமையும் என, இத்துறை சார்ந்த வல்லுனர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். இந்த பிரச்னைக்கு, கடல்சார் பல்கலைக்கழக புது துணைவேந்தர் ரகுராம் நடவடிக்கை எடுப்பாரா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. பிரபலம்:நாடு முழுவதும், 85க்கும் மேற்பட்ட கல்வி நிறுவனங்கள், கடல்சார் படிப்புகளை வழங்கி வருகின்றன. இதில், அதிகபட்சமாக தமிழகத்த...