தேர்தல் மோசடியில் இந்திய சதியா? முள்ளிவாய்க்கால் தொடர்ச்சியா?
இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் ஜனாதிபதித் தேர்தலின் இறுதி முடிவுகளை மகிந்த ராஜபக்ஷவிற்கு சாதகமான வகையில் மாற்றி அமைத்ததாக தற்போது தகவல்கள் வெளியாகியுள்ளன. லங்கா இன்டர்நெட் நிறுவனத்தின் உதவியுடன் பசில் ராஜபக்ஷவினால் மேற்கொள்ளப்பட்ட இந்த சதியில் ஜே.வி.பி.யின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிறிபால அமரசிங்க, இலங்கைப்போக்குவரத்துச் சபையின் தலைவர் தம்மிக்க ஹேவாபத்திர போன்றோரும் சம்பந்தப்பட்டுள்ளதாக தகவல்கள் கசிந்துள்ளன. பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்திலேயே இந்த கணணி சித்து விளையாட்டுகள் இடம்பெற்றதாக கூறப்படுகிறது. வழமையாக இவ்வாறானா தேர்தல் பணிகளுக்கு கொழும்பு பல்கலைக்கழகமே கணனி தொழில்நுட்ப செயற்பாட்டை மேற்கொண்டு வந்துள்ள போதும், இம்முறை பசில் ராஜபக்ஷவின் தலைமையில் பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் இந்த தேர்தல் பணிகள் இடம்பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கதாக உள்ளது. இத்திட்டத்தில் இந்தியாவின் தொழில்நுட்ப நிபுணர்கள் முக்கிய பங்காற்றியதாக கூறப்படுகிறது. இந்த சதிக்கு இந்திய ஆளும் வர்க்கத்தின் பின்னணி இருந்துள்ளதாக கருதப்படுகிறது. அமெரிக்க விசுவாசியான 'சரத்பொன்சேகாவை விட மகிந்த ...