இன அழித்தலின் உண்மைகளை பதிவு:சிவரூபன் பேசுகிறார்
இன அழித்தலின் கொடூர இறுதி நாட்களைக் கண்ட முல்லைத்தீவு யுத்தம் முடிந்து 100 நாட்கள் ஆகிவிட்ட பின்னரும் உலக அமைப்புகளோ, ஊடகங்களோ இன்றுவரை அங்கு செல்ல அனுமதிக்கப் படவில்லை. வதை முகாம்களில் உயிர் வாழும் தமிழரின் உண்மையான எண்ணிக்கை என்னவென்ற விபரம் இதுவரை தருவிக்கப்பட வில்லை. குறியிடப்பட்ட விலங்குகளாய் அத்திறந்த வெளிச்சிறைச்சாலையில் கிடக்கும் தமிழர்களை சந்தித்து உரையாட முழுமையான அனுமதி எவருக்கும் இல்லை. நம் கடமை இன அழித்தலின் உண்மைகளை பதிவு செய்வதும், மானுடத்திற்கான குரலை இழக்காது தொடர்ந்து போராடுவதும். எனவேதான் சிவரூபன் அவர்களின் பதிவு முக்கியமானதாகிறது. மே-17 வரை நந்திக்கடலருகே நின்று இன அழித்தல் தாண்டவத்தை கண்டவர் இவர். அவரது கடிதத்தின் முக்கிய பகுதிகளை வரலாற்றிற்காகவும், நக்கீரன் வாசகர்களுக்காகவும் இங்கே பதிவு செய்கிறேன். இதோ சிவரூபன் பேசுகிறார்: ""ஐ.நா.சபையே, வல்லரசுகளே, உலகின் தலைவர்களே, ஊடகத்துறையினரே, எமது போராட்டத்தின் எதிர்கால நம்பிக்கையாகவும் உயிராகவும் இருக்கிற தமிழ்நாட்டு உறவுகளே! நான் எழுத்தாளனோ, சிந்தனையாளனோ அல்ல. போராட்ட இயக்கமும் வாழ்வும் கற்றுத் தந்தவற்றைத் தவிர ...