தமிழர் சமயம் எது?
நக்கீரன் (Repro) தமிழர் சமயம் எது? இது என்ன கேள்வி? சைவ சமயம்தான் தமிழருடைய சமயம். அது 14,000 ஆண்டு பழமை வாய்ந்த சமயம். சிந்துவெளி நாகரிக காலத்திலும் சைவ சமயம் தழைத்து இருந்திருக்கிறது என்பதற்கு சான்றுகள் ஏராளம் உண்டு என்று சைவர்கள் வாதிடுகிறார்கள். கடவுள், மதம், மொழி இவற்றுக்குத் தொன்மையான வரலாறு இருக்க வேண்டும். அப்படி இருந்தால் மட்டுமே அவை மேலானவை, உயர்வானவை என்ற ஒரு தவறான எண்ணம் தமிழர்களிடம் இருப்பதால்தான் இப்படி அறிவுக்கு ஒத்துவராத, வரலாற்றுக்கு முரணான புராணக் கதைகளை சொல்ல வேண்டிய கட்டாயம் எழுகிறது. மனிதனது வரலாற்றுக் காலத்தில் 14,000 ஆண்டுகள் நீண்ட காலம் அல்ல. ஆனால் மனிதன் தன்னைப்பற்றி கல்லிலும், களிமண்ணிலும், தோலிலும் குறிப்புக்கள் எழுதிய காலத்தோடு ஒப்பிட்டுப் பார்த்தால் 14,000 ஆண்டுகள் மிக நீண்ட காலமாகும். மாந்த இனம் மனிதக் குருங்கில் இருந்து பிரிந்து தனியே வளர்ச்சி அடையத் தொடங்கிய காலம் சுமார் 30 இலட்சம் ஆண்டுகள் இருக்கும் என மனிதநூலார் (யுவொசழிழடழபளைவள) சொல்கிறார்கள். அந்த மனிதக் குரங்கு இனம் ர்ழஅinனைள என்று அழைக்கப்பட்டார்கள். அதன்பின் உரு மலர்ச்சியில் (நஎழடரவழைn) 18-10 இ...